Translate

வெள்ளியின் விடியல்-Venus planet in Tamil

You can translate in English or any other language using google translate.



ஹாய் பிரண்ட்ஸ்:  

           வானத்தில் நிலவுக்கு அடுத்து பளிச்சென்று தெரியும் கிரகம் தான் வெள்ளி. ஆங்கிலத்தில் இதனை வீனஸ்(VENUS) என்று அழைப்பர். இதனை அதி காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் வெறும் கண்களால் காணமுடியும். கோள்களில் இரண்டாவது கோளாக உள்ளது வினஸ். இந்த BLOGல வெள்ளியை பற்றி அறியாத உண்மையை  காண்போம்.


ஆதிகால வெள்ளி:


           இதனுக்கும் ரோம கடவுளின் பெயரைச் சூட்டினார் . அன்பு மற்றும் அழகின் உருவமானவளே   வீனஸ். வினஸ் கிரகத்திற்கு தான் பெண் கடவுளின் பெயரை வைத்தனர்.வெள்ளி கிரகத்தை பூமியும் தங்கை என்று அழைப்பர். பழங்காலத்தில் வெள்ளியை இரண்டு நட்சத்திரங்கள் என்று நினைத்தனர். காலையில் வருவது ஒரு நட்சத்திரம் என்றும் மாலையில் வருவது ஒரு நட்சத்திரம் என்று நினைத்தனர். இவ்விரு நட்சத்திரங்களை லத்தீன் மொழியில்  VESPER மற்றும் LUCIFERஎன்று பெயர் சூட்டினார். கிறிஸ்துவ காலத்தில் LUCIFER மாலை நேரத்தில் தோன்றுவதால் அதை தீய சக்தி என்று கருதினர்.


வெள்ளியின் அமைப்பு:


           டெக்னாலஜி உருவான பிறகு வெள்ளி ஒரு கிரகம் என்றும் அதன் சுற்றுப்புற சூழல் மிகக் கொடுமையானது என்று கண்டறிந்தனர்.  இக்கிரகத்திற்கு செயற்கைகோளை அனுப்பினாலும் அது நீண்ட நாட்கள் இருப்பதில்லை. கிட்டதட்ட பூமியும் வெள்ளியும் ஒரே போலவே உருவானது. இரண்டிலும் ஒரே அளவு, நிறை, அடர்த்தி, கலவை மற்றும் புவி ஈர்ப்பு விசை கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். ஆனால்அளவில் சிறிது குறைவாகவே இருக்கும். 80% பூமியின் எடை இருக்கும்.


வெப்பமான கிரகம்:


           சூரிய குடும்பத்திலேயே மிகவும் வெப்பமான கிரகம் சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிராம் தான் இருந்தாலும் இரண்டாவது கிரகமான வெள்ளியே மிக வெப்பமான கிரகம் ஆகும். அது எப்படி என்ற கேள்வி நிறைய நபர்களுக்கு எழுந்திருக்கலாம். 


Image by <a href="https://pixabay.com/users/WikiImages-1897/?utm_source=link-attribution&amp;utm_medium=referral&amp;utm_campaign=image&amp;utm_content=11022">WikiImages</a> from <a href="https://pixabay.com/?utm_source=link-attribution&amp;utm_medium=referral&amp;utm_campaign=image&amp;utm_content=11022">Pixabay</a>


அதற்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் நாம் பூமி உருவான காலகட்டத்திற்கு தான்  செல்ல வேண்டும். 


பூமியும் வெள்ளியும்:


             இவ்வாறு உருவாகிய வெள்ளி கிரகம் பூமியை போலவே இருந்தது. இப்பொழுது உள்ள பூமியைப் போலவே அப்பொழுது உள்ள வெள்ளியும் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருந்தது. ஆனால் இவ்இரு கிரகங்களும் வெவ்வேறு வழியைத் தேர்ந்தெடுத்தது. பூமியானது தன்னிடமிருந்த CARBON DI OXIDE  வாயுவை நிலத்திற்கு அடியில் கார்பன் வடிவத்தில் செமித்தது. 
          ஆனால் வெள்ளி கிரகம் தன்னிடமிருந்த CARBON DI OXIDE வாயுவை தனது வளிமண்டலத்தில் வெளியிட்டது. இவ்வாறு வெளியான CARBON DI OXIDE  கிரீன்ஹவுஸ் அதாவது பசுமை குடிலை வேகமாக்கியது. இவ்வாறு அடர்த்தியான வளிமண்டலம் உள்ளதால் வெள்ளி கிரகத்துக்கு வரும் சூரிய ஒளி வெளியே செல்ல வழியின்றி உள்ளேயே தங்கியது.


கொடூரமான வெள்ளி:


           இப்போது வெள்ளி கிரகத்தின் வெப்பம் 470 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்கும். இந்த வெப்பம் LEAD என்னும் தனிமத்தை உருக்க வல்லது. அங்கு இறங்கும் விண்கலங்கள் சில மணி நேரமே இருக்கும். அதன் பின் அதன் வளிமண்டலம் அதனை அழித்து விடும். வெள்ளி கிரகத்தின் வளிமண்டலம் மற்ற எல்லா கிரகத்தின் வளி மண்டலத்தை விட மிகக் கனமாக இருக்கும். பூமியின் பெருங்கடலில் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள அழுத்தத்தை விட 900 மடங்கு அதிகமான அழுத்தம் வெள்ளி கிரகத்தில் இருக்கும். அதன் நிலப்பரப்பில் நீர் இருக்க வாய்ப்பே இல்லை. அதன் நிலப்பரப்பு முழுவதுமாக காய்ந்து இருக்கும். 


ஆமை வேக வெள்ளி:


           இக்கிரகத்தில் மூன்றில் ஒரு நிலப்பகுதி தொடர்ச்சிமலையாகவே இருக்கும். அது தன்னைத் தானே சுற்றி வருவதற்கு 243 நாட்கள் எடுத்துக்கொள்ளும். அதுவே சூரியனை சுற்றி வலம் வருவதற்கு 225 நாட்களே எடுக்கும். வெள்ளி தன்னைத்தானே மிக மெதுவாக சுற்றி வருவதால் அதன் காந்த புலம் மிகக் குறைவாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக  பூமியின் காந்தப்புலத்தை 100% என்று எடுத்துக்கொண்டால் அதில் வெள்ளியின் காந்தப்புலம் 0.00015% சதவீதமே உள்ளது.


ஆராய்ச்சி, சூறாவளி மற்றும் பல:


           நம் பூமியில் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். ஆனால் வெள்ளியில் சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும்.
           வெள்ளி கிரகத்தில் உருவாகும் சூறாவளி ஒரு மணி நேரத்தில் 360 கிலோ மீட்டர் தூரம் செல்லும். இவ்வாறு சுற்றுவதால் பூமியின் கணக்கில் வெறும் நான்கே நாட்களில் வெள்ளி கிரகத்தை முழுவதுமாக வலம் வந்துவிடும். இது வெள்ளி தன்னைத்தானே சுற்றி வருவதை விட 60 மடங்கு அதிக வேகத்தில் சுற்றும். இதுவே இன்று வரை புரியாத புதிராக உள்ளது. 
          இதுவரை நாம் வெள்ளி கிரகத்திற்கு 20 செயற்கைக் கோள்களுக்கு மேல் அனுப்பி உள்ளோம். அதனால் வெள்ளி கிரகத்தை 98% முழுவதுமாக ஆராய்ச்சி செய்து விட்டோம். 


என்னதான் நாம் பூமியைப் போல உருவாகி இருந்தாலும் வெள்ளிக்கு பூமியின் மகிமை வராது. மரம் வளர்ப்போம்; பூமியை காப்போம்.

Watch the video on Youtube for better Understanding

வெள்ளியின் விடியல் Venus planet in Tamil

Post a Comment

This is for Space and Science Lovers

Previous Post Next Post